×

போலீசாருக்கு யோகா பயிற்சி

 

கம்பம், ஜூன் 22: கம்பத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று கம்பத்தில், அதிக மன அழுத்தத்தில் காணப்படும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி மூலம் புத்துணர்ச்சி அளிக்க யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் திரிகோணாசனம், அர்த்த சக்கராசனம், பார்ஸவ கோணசனம், வீரபத்ராசனம், பஷ்ஷிமோத்தாசனம் மற்றும் கபாலபதி, பஸ்திரிகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகா நிபுணர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவி ராம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags : World Yoga Day ,Pillar ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...