×

வருசநாடு அருகே சின்னச்சுருளியில் சீரமைப்பு பணிகள் செய்திட கோரிக்கை

வருசநாடு, ஜூன் 22: சின்னச்சுருளி அருவியில் போர்க்கால அடிப்படையில் நிரந்தரச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு கோம்பைதொழு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவிக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையினால் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இரும்புத் தடுப்புக் கம்பிகள் மற்றும் சிமெண்டு படிக்கட்டுகள் அடியோடு சேதமடைந்தன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கடந்த சில மாதங்களாக அருவிக்குச் செல்ல தடை விதித்திருந்தனர். மேலும் சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்பே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Chinnachuruli ,Varusanadu ,Western Ghats ,Gombaithozh ,Andipatti ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...