×

செயல்படாமல் இருக்கும் தீக்காய சிகிச்சை பிரிவு

 

சாத்தூர், ஜூன் 22: சாத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் முதல் மாடியில் தீக்காய சிகிச்சை பிரிவு உள்ளது. அங்கு தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற வருவோருக்காக இரண்டு படுக்கைகள் மட்டுமே உள்ளது. மேலும் இந்த பிரிவில் தீக்காயமடைந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இல்லாததால், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Sattur ,Accident and Emergency Department ,Sattur Government Hospital ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...