- நிஷாந்த் கிருஷ்ணா
- மதுரை கலெக்டர்
- மதுரை
- மதுரை கலெக்டர்
- ஈரோடு மாவட்டம்
- திருச்சி மாவட்டம்,
- ரங்கம் மாவட்டம்
- கிருஷ்ணகிரி மாவட்டம்...
மதுரை, ஜூன் 22: மதுரை கலெக்டர் அலு வலகத்தில் 220வது புதிய மாவட்ட கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணா நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சி பணியிலும், திருச்சி மாவட்டம் ரங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில் சப் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (சிப்காட்), சென்னை வழிகாட்டி (கைடன்ஸ்) நிறுவனங்களின் செயல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மதுரை மாவட்டத்தின் 220வது மாவட்ட கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணா நேற்று பொறுப்பேற்றுள்ளார்.
