×

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் தண்ணீரில் மிதந்தபடி வாலிபர் யோகா

 

முத்துப்பேட்டை,ஜூன் 22: முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமத்தில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் யோகாவை கொண்டு செல்லும் வகையிலும் யோகா பயிற்சியின் அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதி இளைஞர்களால் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.

மேலும் யோகா பயிற்சியை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அங்கு வந்த செந்தில்நாதன் என்பவர் கிராம மக்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள வெட்டு குளத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கையில் தேசியக்கொடியை பிடித்தவாறு மூச்சை முழுமையாக உள்வாங்கி கொண்டு தண்ணீரில் மிதக்கும் யோகா செய்து காண்பித்தார். அதனை தொடர்ந்து இவருடன் பயிற்சிப்பெரும் சிறுவர்களும் மற்றும் அவரது மகன் கௌசிக் (12) ஆகியோர் இந்த யோகாவை செய்து காண்பித்தனர். இதனை பார்த்த கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

Tags : International Yoga Day ,Muthupettai ,Keezhapperumazhay ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...