×

அனுமதியின்றி இரவு பகலாக செம்மண் வெட்டி எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை

 

தஞ்சாவூர், ஜூன் 22: பூதலூர் தாலுக்கா, மருதக்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக பர்மிட் இல்லாமல் செம்மண் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர் இளையராஜா தமிழக முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு வழங்கினார். அவர் அனுப்பி கோரிக்கை மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா மருதக்குடி வைரப்பெருமாள்பட்டி பகுதியில் இயற்கை வள கொள்ளையர்கள் தொடர்ந்து எந்தக்கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும், அந்த ஆட்சியாளர்களையும், மாவட்ட கனிமவள் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வளமான இயற்கை செம்மண், சவடுமண் ஆகியவற்றை எந்த அனுமதி பெறாமல், கொள்ளையடிப்பதே வழக்கமாக கொண்டு இயங்கி வந்தனர்.

Tags : Thanjavur ,Ilayaraja ,Tamil ,Nadu ,Chief Minister ,Marudhakudi ,Bootalur taluka ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...