தஞ்சாவூர், ஜூன் 22: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 225 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக இருப்பு வைக்க இடம் இல்லாத காரணத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 13 தற்காலிக நெல் சேமிப்பு கிடங்குகளும், 22 நிரந்தர சேமிப்பு கிடங்குகளும் உள்ளது. இவை அனைத்திலும் கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முழுவதுமாக நிரம்பி உள்ள நிலையில் நெல்லை இருப்பு வைப்பதற்கு இடமில்லாமல் உள்ளது.
