×

தஞ்சாவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

 

தஞ்சாவூர், ஜூன் 22: தஞ்சாவூரில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்கா லனி, ஆர்.ஆர்.நகர், புதிய பஸ் நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கடம் நகர், கரூப்ஸ்நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜிநகர், மாதாக் கோட்டை, சோழன்நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மானோஜிப்பட்டி, ரெட்டிபாளையம்ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரிநகர், ராஜலிங்கம் நகர் ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன்நகர், ஜெபமாலை புரம், மற்றுமு அதனை சுற்றியுள்ள பகுதிக ளுக்கு மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை தொடர்பாக 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Thanjavur ,Thanjavur Electricity Board ,Executive Engineer ,Annasamy ,Thanjavur Medical College Road… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...