×

லாரி மோதி பலியான தூத்துக்குடி விவசாயிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

 

நெல்லை, ஜூன் 19: லாரி மோதி விவசாயி பலியான வழக்கில் இன்சூரன்ஸ் பிரீமியம் காசோலை பணமின்றி திரும்பியதால் காப்பீடு ரத்து செய்யப்பட்டதை ஏற்று லாரி உரிமையாளரே பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சத்து 51 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தூத்துக்குடி மாவட்டம், வடக்கு வண்டானம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பசுவந்தனை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கணேசனின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags : Nellai ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...