வருசநாடு, ஜூன் 18: வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட வைகைநகர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகே உள்ள இந்த சாலைகளில் மழைக்காலங்களில் ஒவ்வொரு நாளும் மழை நீர்களும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் நிறைந்து வடியும் தண்ணீரும் சாலைகளில் அவ்வப்போது செல்கிறது. இதனால் சாலைகளில் இருபுறங்களிலும் கழிவுநீர் வாறுகால் வசதி ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. ஒரு சில இடங்களில் கழிவுநீர் வாறுகால் வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து பலமுறை வருசநாடு நிர்வாகத்திடமும், கிராம சபை கூட்டங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கழிவுநீர் வாறுகால் வசதி செய்து கொடுத்து தொற்றுநோய் பரப்பும் அபாயங்களை தடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களில் இருந்து நிலைதடுமாறி விழுந்து பலர் காயமடைந்துள்ளனர் எனவே விரைவில் புதிய சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என்றனர்.
