தேனி, ஜூன் 18: தேனி, சின்னமனூர், போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும், சில சமயங்களில் வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து விடுகின்றன. தகவல் கிடைக்கும் பட்சத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் ஆர்வலர்கள் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில் வீட்டின் அருகிலோ, அல்லது குடியிருப்பு பகுதிகளை சுற்றியோ முட்புதர்கள் இருந்தால் அதனை அகற்றி சுத்தமாக வைத்துக் கொண்டால் பாம்புகள் நடமாட்டத்தை தடுக்க முடியும்’’ என்றனர்.
