சீர்காழி, ஜூன் 18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோயில் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் வியாபாரிகள் பொதுமக்கள் கழிவு நீர் வழிந்து ஓடுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய் சரிவர பராமரிக்காததாலும், கழிவு நீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததாலும் இதுபோன்று அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றன
