×

வண்டிப்பெரியாறு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூர தாக்குதல்: இருவர் கைது

 

கூடலூர், ஜூன் 16: வண்டிப்பெரியாறு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 இளைஞர்கள் ஆஃப் ரோடு சவாரிக்காக டூவீலரில் வண்டிப்பெரியாறு சத்திரம் பகுதிக்கு வந்திருந்தனர். கடந்த மூன்று நாட்களாக அவர்கள் அப்பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சத்திரம் மொட்டக்குன்று பகுதிக்கு ஆஃப்-ரோடு சவாரிக்காக டூவீலர்களில் சென்ற போது அங்கு வந்த சஃபாரி ஜீப்பில் இருந்து சேறு தெறித்ததாக கூறி, பைக் ரைடர்களுக்கும், ஜீப் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு நேரத்தில் பைக் ரைடர்கள் தங்கி இருந்த ரிசார்ட்டை கண்டறிந்த சுமார் 20 பேர் கொண்ட ஜீப் ஓட்டுநர்கள் குழு அங்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், திருச்சூரை சேர்ந்த அனீஸ் (26), மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுஃபைன் (26) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் ரிசார்ட் நிர்வாகி விஷ்ணு விழா மற்றும் பைக் ரைடர்கள் வண்டிப்பெரியாறு போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை குமுளியைச் சேர்ந்த சகோதரர்களான கார்த்திக் கண்ணன் மற்றும் கலேஷ் கண்ணன் ஆகியோரை வண்டிப்பெரியார் போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற ஜீப் ஓட்டுநர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

Tags : Vandiperiyar ,Gudalur ,Kerala ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...