×

தேவாரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை தேவை

 

தேவாரம், ஜூன் 16: கோம்பை-தேவாரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், தே.சிந்தலைசேரி, பல்லவராயன் பட்டி, கீழசிந்தலை சேரி, லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பூக்கள் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பல்லவராயன் பட்டி பகுதியில் மல்லிகைப்பூ, பிச்சிப் பூ, கோழி கொண்டை உள்ளிட்ட பூக்களும், தே.சிந்தலை சேரி பகுதிகளில் கனகாம்பரம் மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களும், கோம்பை பகுதியில் செவ்வந்தி பூக்களும் அதிக ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம்.

இதற்காக தண்ணீர் தோட்டங்களில் இருந்து பாய்ச்சுவது குறைவாகும்.குறைந்த தண்ணீரிலேயே விளைந்து விடும். இதனால் விவசாயிகள் இதனை நம்பி தங்களது தோட்டங்களில் பூக்கள் சாகுபடியினை மேற்கொள்வர். தற்போது பூக்கள் சாகுபடி பல மடங்கு குறைந்து விட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தேவாரம்-கோம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பூக்கள் சாகுபடியினை அதிகம் காண முடியவில்லை. பருவம் தவறிய மழையால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.

இதனால் பூக்கள் விவசாயத்திற்கு மாற்று விவசாயமாக, சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பூக்கள் சாகுபடி, இந்த பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் செய்யப்படுவது வழக்கம். தற்போது 20 ஏக்கர் கூட விவசாயம் இல்லை. எனவே பூக்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thevaram ,Gombai-Thevaram ,Theni district ,Gombai ,Pannapuram ,De.Sinthalaiseri ,Pallavarayan ,Patti ,Keezhasintalaiseri ,Lakshmi… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...