சென்னை: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 9.1.2024 முதல் 11.1.2024 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு நுட்பங்கள்,விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
The post யூடியூப் சேனல் உருவாக்குவது குறித்து 3 நாள் பயிற்சி appeared first on Dinakaran.