தமிழ் டிவி சீரியல்களில் பெண் நடிகர்களிடம் இருந்து இயக்குனர்களும் டெக்னீஷியன்களும் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. அதேபோல், சில பெண்கள் நன்றாக சம்பாதிப்பதால் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்கிறார்கள். அதையும் மீறினால் நடிகர்களுக்கு தடை செய்யப்படும் சம்பவமும் நிகழ்கிறது. சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார்.
ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டை கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் எப்படி கொடுப்பது. வேண்டும் என்றால், சிபிஐ மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். குழந்தையாக நடிக்கும்போது கூட பாலியல் தொல்லை தருகிறார்கள். நான் குழந்தையாக நடிக்கும்போது இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டேன். என் அம்மாவிடம் சொல்லி இந்த பிரச்னையை எழுப்பியபோது 75% முடிந்த இந்தி படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post சிறு வயதில் பாலியல் தொல்லை தந்தார்கள்: குட்டி பத்மினி பேட்டி appeared first on Dinakaran.