நவராத்திரி கொண்டாடட்டத்தின் முதல் நாள் அக் 15ம் தேதி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை வேறொரு தேதிக்கு மாற்றுமாறு பிசிசிஐக்கு அம்மாநில போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குஜராத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் அக்டோபர் 15ம் தேதி நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post அகமதாபாத்தில் நடைபெற இருந்த இந்தியா – பாக். இடையேயான ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம் என தகவல்!! appeared first on Dinakaran.