×

பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற பெண்கள் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எப்போது அதிக வாகன போக்குவரத்து உள்ள நிலையில் பல்லடம் நகரம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி இன்று மதியம் 2 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று வந்த கொண்டிருந்தது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நாலுரோடு அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி நகராட்சி அலுவலகம் முன்பு தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலை ஓரமாக நகராட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் கண்டெய்னர் அடியில் சிக்கி கொண்டனர்.

கண்டெய்னர் அதிக பாரத்தோடு இருந்ததால். கிரேன் உதவி மூலம் கண்டெய்னர் கவிந்து சிக்கிய பெண்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்து காணப்பட்டது. பொதுமக்கள் அதிகளவு கூடியதால் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் இறந்த பெண்கள் பல்லடத்தை சேர்ந்த மகாராணி மற்றும் கிரிஜா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Balladam Nalurodu ,Tiruppur ,Palladam Naluru ,Tiruppur district ,Palladium ,Govai-Trichy National Highway ,Palladam ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்