- தவெகா
- மாவட்டம்
- பனியூர்
- சென்னை
- பனாயூர்
- தவேக திருவள்ளூர் மத்திய மாவட்டம்
- மணிகண்டன்
- திருவள்ளூர்
- மத்திய மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெற்றி கலாம்
சென்னை: தவெக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரை மாற்ற கோரி பெண்கள் உள்ளிட்டோர் பனையூர் தலைமை அலுவலகத்திற்குள் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றிக் கழத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன் என்பவர் கடந்த 8 மாதங்களாக சரிவர வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்றும், கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலிப்பதாகவும் கூறி திருவேற்காடு,
ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கிழக்கு கடற்கரை சாலை பனையூர் 8வது அவின்யூவில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட செயலாளருக்கு எதிராக கையில் பதாகைகள், பேனர்களை பிடித்தபடி கோஷமிட்டன்ர. தமிழக வெற்றிக் கழக கட்சியின் அலுவகத்திற்குள் அக்கட்சியினரே எதிர்ப்பு பேனர்களை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக கட்சி அலுவலகத்தில யாரும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பணம் பெற்றுக் கொண்டு பொறுப்புகள் வழங்குவதாகவும், சரிவர கட்சியின் வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்றும், பொறுப்புகளை மாறி மாறி போடுவதாகவும் குற்றம்சாட்டி மாவட்ட செயலாளரை மாற்ற கோரி வலியுறுத்தி கட்சி தலைமை அலுவலகத்தின் உள்ளே அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
