×

3 திருமண வாழ்க்கையும் போச்சு; 7 வயது மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி: அருப்புக்கோட்டை அருகே சோகம்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி போஸ்டல் காலனியை சேர்ந்தவர் பொற்செழியன். இவரது மனைவி முனீஸ்வரி (36). இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியர் பிரிந்தனர். மகள் தாயுடன் வசித்தபடி, பிளஸ் 2 படித்துள்ளார். இந்நிலையில், மதுரையை சேர்ந்த சடையாண்டியை, முனீஸ்வரி 2வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயதில் மகள் உண்டு. சடையாண்டியிடம் குடும்பத் தகராறு ஏற்பட்டு அவரையும் முனீஸ்வரி பிரிந்தார். பின்னர், தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், முனீஸ்வரிக்கும், பாலையம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தனர். கடந்த மாதம் 17ம் தேதி சாலை விபத்தில் முருகன் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த முனீஸ்வரி, மூத்த மகளை நேற்று முன்தினம் காலை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பினார். மாலையில் பள்ளி முடிந்து மகள் வீடு திரும்பிய போது, தாய் முனீஸ்வரி, தங்கை இருவரும் மயங்கி கிடந்தனர். இதனால், அலறி கூச்சலிட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி இறந்தாள். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், முனீஸ்வரி அரளி விதையை அரைத்து கொடுத்து மகளை கொன்றுவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

Tags : Aruppukottai ,Potchezhiyan ,Palayampatti Postal Colony ,Virudhunagar district ,Muneeswari ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...