ஐந்து மாநில தேர்தலில் பாஜ, ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தி உட்பட 21 எம்பிக்களை களமிறக்கி உள்ளது. இதில் ராஜஸ்தான், மபியில் தலா 7 எம்பிக்களும், சட்டீஸ்கரில் 4, தெலங்கானவில் 3 எம்பிக்களும் போட்டியிட்டனர். இவர்களில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த 14 நாட்களுக்குள் எம்பி அல்லது எம்எல்ஏ இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் 14 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எம்பி பதவியை இழக்க நேரிடும். எம்எல்ஏவாக தொடரலாம் என அரசியலமைப்பின் 101வது பிரிவின் விதியில் கூறப்பட்டிருக்கிறது.
The post வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு 14 நாள் கெடு appeared first on Dinakaran.