தண்ணீர் வற்றியதால் கொளுத்தும் வெயிலில் அவதி குளித்தலை காவிரி கரையில் செயற்கை நீரூற்று அமைக்கப்படுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை : குளித்தலை காவிரி ஆற்றில் பக்தர்கள் வசதிக்காக செயற்கை நீரூற்று வசதி ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலையில் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி உள்ள சிவதனங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதுமான கடப்பநேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலின் எதிரே காவிரி ஆற்றுப்பகுதியில் கடம்பன் துறை உள்ளது.

இத்துறையில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரகளிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் காவிரி கடம்பன் துறையில் நீராடி வடக்கு நோக்கி இருக்கும் சிவனை வழிபட்டு செல்வது வழக்கம். தற்பொழுது சித்திரை, வைகாசி மாதம் என்பதால் சுற்றுவட்டார பகுதி கிராம கோயில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுவதால், தினந்தோறும் ஏராளமானோர் கரகம் பாலித்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் கிராம கோயில்களில் சாமியை எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து குறியெடுத்து சாமியை அழைத்து செல்கின்றனர். அப்போது காலையில் தண்ணீர் எடுக்க வரும் பக்தர்கள் மதியம் வரை ஆற்றில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் காவிரி மணலாற்றில் கால் வைக்க முடியாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து கரையேறும் இளைப்பாறும் நிலை ஏற்படுகிறது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கல் அவதிப்படுவதை தினந்தோறும் காணமுடிகிறது. இதுமட்டுமிந்றி இறந்தவர்களுக்கு ஈமக்காரியம் செய்ய வேண்டி வருவோரும், தண்ணீரை தேடி நடு ஆற்றுக்கு செல்ல வேண்டி உள்ளது. காலை நேரத்தில் 9 மணி முதல் காவேரி ஆற்று மணல் வெயிலின் தாக்கத்தால் சூடாகி பாதங்கள் கொப்பளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் காவிரி கரையோரமே ஈம காரியங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. தற்பொழுது வைகாசி மாதம் பிறக்க இருப்பதால் குளித்தலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தீர்த்த குடம் எடுப்பதற்கு இந்த கடம்பன் துறையை தான் நாடி வருகின்றனர். அதனால் குளித்தலை நகராட்சி நிர்வாகம்.
இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக செயற்கை நீரூற்று வைப்பது போல் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக பக்தர்கள் வசதிக்காக கடம்பன் துறை காவிரி கரையோரம் வைகாசி திருவிழா முடியும் வரை செயற்கை நீரூற்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தண்ணீர் வற்றியதால் கொளுத்தும் வெயிலில் அவதி குளித்தலை காவிரி கரையில் செயற்கை நீரூற்று அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: