×

1,350 ஹெக்டேருக்கு அலையாத்திக் காடுகளை உருவாக்கி சாதனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: பசுமைத் தமிழ்நாடு மிஷன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் அலையாத்தித் தாவரங்களை நட்டு 707 ஹெக்டேர் அலையாத்திப் பரப்பை மீட்டுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post 1,350 ஹெக்டேருக்கு அலையாத்திக் காடுகளை உருவாக்கி சாதனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,model government ,Tiruvarur district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்