- விஜயவாசாந்த்
- யூனியன் அரசு
- ஈரான்
- இஸ்ரேல்
- சென்னை
- மத்திய அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- கன்னியாகுமாரி
- விஜய்…
- தின மலர்

சென்னை: போரின் பிடியிலுள்ள ஈரான், இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள ஆயிரத்திற்கும் மேலான குமரி மீனவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு விஜய் வசந்த் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ள சூழ்நிலையில் அங்கு மிக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்பொழுது அமெரிக்காவும் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் மிக அபாயமான கட்டத்தில் உயிர் பிழைத்து வருகின்றனர்.
அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. தற்பொழுது ஈரான் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டிலும் பல மீனவர்கள் பணி செய்து வந்தனர். இவர்கள் தற்பொழுது பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். இவர்களை அங்கிருந்து மீட்டு வருவது அரசின் தலையாய கடமை. ஆகவே இந்திய அரசு அங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும்.
The post ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி. கடிதம் ஈரான், இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும் appeared first on Dinakaran.
