விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெகன்மோகன் பணியாற்றுவார்: ஆந்திரா அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதன்பிறகு மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் நிருபர்களிடம் கூறியதாவது, “அக்டோபர் 23ம் தேதி விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் பணியாற்றுவார். இன்று (நாளை) முதல் சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக ஒரு குழுவை அமைக்க முதல்வர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் கால அட்டவணைப்படி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெகன்மோகன் பணியாற்றுவார்: ஆந்திரா அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: