×
Saravana Stores

இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி!

சென்னை: இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாட்டு இளைஞர்களே, ஒன்றைக் கவனியுங்கள். நரேந்திர மோடியின் எண்ணம் வேலைவாய்ப்பு தருவது அல்ல. புதிய பதவிகளை உருவாக்காமல் இருப்பதோடு காலியாக உள்ள மத்திய அரசின் பதவிகளையும் நிரப்பாமல் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளைக் கருத்தில் கொண்டால், 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

முக்கியமான துறைகளை மட்டும் பார்த்தால், ரயில்வேயில் 2.93 லட்சமும், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சமும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 2.64 லட்சமும் காலியாக உள்ளன. 15 முக்கிய துறைகளில் 30%க்கும் அதிகமான பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதற்கு மத்திய அரசிடம் பதில் உள்ளதா? பொய் உத்தரவாதப் பையை’ சுமந்து வரும் பிரதமரின் சொந்த அலுவலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக இருப்பது ஏன்? நிரந்தர வேலை கொடுப்பதை சுமையாகக் கருதும் பாஜக அரசு, பாதுகாப்பும் மரியாதையும் இல்லாத ஒப்பந்த முறையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

காலி பணியிடங்கள் நாட்டின் இளைஞர்களின் உரிமை, அவற்றை நிரப்ப உறுதியான திட்டத்தை தயாரித்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின் மூடிய கதவுகளைத் திறப்போம் என்பதே இந்திய கூட்டணியின் உறுதி. வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை உடைத்து இளைஞர்களின் தலைவிதி உயரப் போகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி! appeared first on Dinakaran.

Tags : EU government ,India ,Rahul Gandhi ,CHENNAI ,EU ,Narendra ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...