×

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்-க்கு தடை: அதற்காக கூறும் காரணத்தால் மெட்டா நிறுவனம் கவலை!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வமான சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறிய தடைக்கான காரணமாக, பயனர்களின் தரவு பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவுகள் குறியாக்கப்படாமல் இருப்பது, மற்றும் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை சைபர் பாதுகாப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாடு பயனர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப், அங்கீகரிக்கப்பட்ட மற்ற செயலிகளை விட உயர் பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருப்பதாக மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022ம் ஆண்டில் பாதுகாப்பு பிரச்சினைகளைக் காரணத்தை சுட்டிக்காட்டி, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை நாடாளுமன்ற ஊழியர்களின் சாதனங்களிலிருந்து பிரதிநிதிகள் சபை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்-க்கு தடை: அதற்காக கூறும் காரணத்தால் மெட்டா நிறுவனம் கவலை!! appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,US Congress ,Meta ,Washington ,Interior Minister ,Dinakaran ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...