ஒடிசா ரயில் விபத்து; எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

 

ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; இந்த நிலையில், ராஜினாமா செய்ய முடியாது என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல எனவும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணம் இது எனவும் ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை. நாங்கள் அதனையே கடைபிடிக்கிறோம்.

ராட்சத கிரேன் மூலம் ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்து; எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்! appeared first on Dinakaran.

Related Stories: