×

ஒன்றிய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பாஜக ஆளாதா மாநிலங்கள் புறக்கணிக்கபட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனார். இந்த போராட்டம் என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்ட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி சமாஜ்வாடி கட்சி தலைவர் மற்றும் பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் மட்டுமில்லாமல் எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதே சமயத்தில் தமிழக கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கயூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் தனியாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்க்குள் திமுகவின் மக்களவை தலைவராக இருக்க கூடிய டி.ஆர்.பாலு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் பாஜவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த போராத்திற்கு பிறகு நாடளுமன்றம் தொடங்கிய பிறகு மாநிலங்களவையில் கேள்வி நேரம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டது. கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள், பாஜக ஆளாத மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். அதை ஏற்ற்கொண்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து குறல் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவையி இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post ஒன்றிய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Opposition parties ,Rajya Sabha ,India ,Delhi ,MPs ,Congress ,India Alliance ,BJP ,Aladdha ,Congress party ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்;...