இளங்கலை நீட் தேர்வு:வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களில் நடத்த ஏற்பாடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி: இளங்கலை நீட் தேர்வுக்காக வெளிநாடுகளை சேர்ந்த 14 இடங்களில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்தது.

தேர்வு முகமை மொத்தம் 554 மையங்களில் தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதில் ஒரு மையம் கூட வெளிநாாட்டில் இல்லை என்று மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், 12 நாடுகளில் உள்ள 14 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராசார் நேற்று தெரிவித்தார்.இந்த வெளிநாட்டு மையங்கள் வருமாறு: துபாய்,அபுதாபி,ஷார்ஜா(யுஏஇ), குவைத் சிட்டி (குவைத்), பாங்காக்(தாய்லாந்து), கொழும்பு(இலங்கை),தோகா(கத்தார்),காத்மாண்டு(நேபாளம்),கோலாலம்பூர்(மலேசியா),லாகோஸ்(நைஜீரியா), மனாமா(பக்ரைன்), மஸ்கட்(ஓமன்), ரியாத்(சவுதி அரேபியா) மற்றும் சிங்கப்பூர் சிட்டி (சிங்கப்பூர்).

The post இளங்கலை நீட் தேர்வு:வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களில் நடத்த ஏற்பாடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: