டெல்லி: யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக டெல்லியில் யுஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தினர். மாணவ அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து யுஜிசி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.