சென்னை : பேரிடர் கால நடவடிக்கைகளை அரசியலாக்க முயற்சிக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு விழாவுக்குப் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அரசு எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன்; தவறான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை,”என்றார்.
The post பேரிடர் கால நடவடிக்கைகளை அரசியலாக்க முயற்சிக்கிறார் நிர்மலா சீதாராமன் : உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.