உதயநிதியின் சனாதன கருத்து குறித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: உதயநிதியின் சனாதன தர்ம கருத்து குறித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. டெல்லியில் இன்று நடந்த ஒன்றிய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அச்சமயம், சனாதனம் குறித்த உதயநிதியின் விமர்சனம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சர்களிடம் கருத்து கூறியதாக கூறப்படுகிறது.

சனாதன தர்ம விவகாரத்திற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் வலியுறுத்தியதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது எனவும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில் மோடி பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post உதயநிதியின் சனாதன கருத்து குறித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: