×

தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலை மூட்டைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. சோதனையில் 270 கிலோ பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன், இருசக்கர வாகனம். கடத்தலில் ஈடுபட்ட ஆரோக்கிய ஜான்சன் (36) என்பவரை கைது செய்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலை மூட்டைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Sri Lanka ,Threspuram beach ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்