- துப்பாக்கி
- டிரம்ப்
- வாஷிங்டன்
- பென்சில்வேனியா பொது
- ஜனாதிபதி
- ஐக்கிய மாநிலங்கள்
- தாமஸ் மத்தேயு க்ரூக்ஸ்
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஈடுபட்ட போது ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது. இதுதொடர்பாக 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 2022 ஆகஸ்ட் முதல் அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு தொடர்பான சேவையை கவனிக்கும், ரகசிய சேவை இயக்குநர் கிம்பர்லி சீட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பாதுகாப்பு குறைபாட்டிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். கனத்த இதயத்துடன் இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
The post டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு பாதுகாப்பு இயக்குநர் ராஜினாமா appeared first on Dinakaran.