×

அமைச்சரை அதிபர் பதவி நீக்கம் செய்ததால் ஜெர்மனியில் 3 கட்சி கூட்டணி அரசு கவிழ்ந்தது

பெர்லின்: ஜெர்மனியில் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னரை அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் பதவி நீக்கம் செய்ததையடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஜெர்மனியில் சோசியல் டெமாக்ரட்ஸ்,கிரீன்ஸ் மற்றும் ப்ரீ டெமாக்ரட்ஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதில் ப்ரீ டெமாக்ரட்ஸ் கட்சியை சேர்ந்த தலைவரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியன் லிண்ட்னருக்கும் அதிபருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நாட்டின் கடன் சுமையை தவிர்ப்பதற்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் வலியுறுத்தினார்.ஆனால் வணிகர்களின் ஆதரவு கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் அதிக வரிவிதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதே போல் நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதற்கு நிதி அமைச்சர் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக அதிபருக்கும்,நிதி அமைச்சருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து நிதி அமைச்சர் லிண்ட்னரை அதிபர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது.

The post அமைச்சரை அதிபர் பதவி நீக்கம் செய்ததால் ஜெர்மனியில் 3 கட்சி கூட்டணி அரசு கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags :
× RELATED தன்னாட்சி நாட்டுக்கு எதிராக தொடரும்...