×

படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் துணிச்சலுடன் போராடி வென்றதாக ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!!

மாஸ்கோ : அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதின், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்க, இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்வதாக கூறினார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த தலைவருடனும் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக உள்ளது என்றும் புதின் குறிப்பிட்டார். படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய ட்ரம்ப், துணிச்சலுடன் போராடி ஒரு வீரமான மனிதராக செயலாற்றியதாக புதின் புகழாரம் சூட்டினார். ரஷ்ய உடனான உறவை மீட்டு எடுப்பது குறித்த ட்ரம்பின் கருத்துக்கள் கவனத்திற்கு உரியவை என்ற புதின், இருப்பினும் அமெரிக்காவுடனான உறவில் அடுத்து என்ன நடக்கும் என்பது யூகிக்க முடியாது ஒன்று என்று கூறினார்.

The post படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் துணிச்சலுடன் போராடி வென்றதாக ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : MINT ,TRUMP ,Moscow ,President ,Vladimir Putin ,US ,Sochi, Russia ,Russian ,Chancellor ,
× RELATED ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்...