×

லாஸ் ஏஞ்சலிஸ், வென்ச்சுரா நகரங்களில் பரவி வரும் காட்டுத் தீ: 10,400 ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள் சாம்பல்

கலிஃபோர்னியா: காட்டுத் தீயின் தாய் என்று சூழிலியல் ஆர்வலர்கள் பலரால் குறிப்பிடப்படும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் வென்ச்சுரா நகரங்களில் பல ஏக்கர் வனப்பரப்பில் காட்டு தீ பரவி வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வென்ச்சுரா மலைப்பிரதேசத்தில் நேற்று திடீரென காட்டு தீ பரவியது.

நேற்று ஒரே நாளில் 10,400 ஏக்கர் பரப்பளவிலான பல பகுதியை காட்டு தீ சாம்பலாக்கி உள்ளது. தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியில் 140 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் நீரை இரைத்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post லாஸ் ஏஞ்சலிஸ், வென்ச்சுரா நகரங்களில் பரவி வரும் காட்டுத் தீ: 10,400 ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள் சாம்பல் appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,Ventura ,California ,United States ,of ,
× RELATED இறந்த பிறகும் சம்பாதிக்கும் மைக்கேல்...