தாளாளர் அரங்கநாதன் முன்னிலை வகித்தார். தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன், இயக்குநர்கள் கலந்துகொண்டு, உணவு திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.மேலும், சிறப்பான பாரம்பரிய உணவை செய்து கட்சிப்படுத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். முன்னதாக, கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
உணவு திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரம்பரிய உணவுகளை எடுத்து வந்து காட்சிப்படுத்தியதுடன், அனைவருக்கும் வழங்கி பாரம்பரிய உணவுகளின் நன்மை தீமைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு, பலவகையான பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
The post காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா appeared first on Dinakaran.