காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்கதிர்பூர், உத்திரமேரூர் வட்டத்தில் களியாம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் சின்னிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிளாய், குன்றத்தூர் வட்டத்தில் சென்னாகுப்பம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன. மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
The post நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.