இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1( தொகுதி3) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்து தேர்வு 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
முன்னதாக இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் ஹால்டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் ஒரு முறை பதிவின் விவரப் பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.