×

திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 12.58 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை

 

திருவாரூர், ஆக. 28: நோய் நாடி நோய் முதல் நாடி என்பதற்கு ஏற்ப ஏழை, எளிய பொதுமக்கள் தங்களுக்கு இருந்து வரும் மருத்துவ குறைபாடுகளை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெறும் வகையில் வரும் முன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த திட்டத்திற்கும் ஒரு படி மேலாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி துவக்கி வைத்தார்.

அதன்படி பொது மக்களின் வீடுகளுக்கே மருத்துவ பணியாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பெற்று வருபவர்களுக்கும் அவர்களது வீடுகளிலேயே மருந்து மாத்திரைகளை வழங்கியும் வருகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோய் ஆகியவையும் கண்டறியப்பட்டு சிகிச்சையும், உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.இது மட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்களுக்கும் அதற்கான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி என 10 ஒன்றியங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 வருட காலத்தில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகள் மற்றும் ஏற்கனவே தொடர் சிகிச்சையில் இருந்து வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் என மொத்தம் மாவட்டத்தில் கடந்த 2 வருட காலத்தில் 12 லட்சத்து 58 ஆயிரத்து 69 பேர்கள் இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 12.58 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்