×

திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

திருவாரூர், செப். 24: திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சாரு உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்ட முழுவதும் பணியாற்றி வரும் 18 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சாரு கடந்த 21ந் தேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் தாசில்தாராக பணியாற்றி வந்த செந்தில்குமார் திருத்துறைப்பூண்டி தாசில்தாராகவும், நன்னிலம் தாசில்தாராக பணியாற்றி வந்த குருமூர்த்தி திருவாரூர் தாசில்தாராகவும், குடவாசல் தாசில்தார் தேவகி நீடாமங்கலம் தாசில்தாராகவும், வலங்கைமான் தாசில்தார் ரஜியாபேகம் நன்னிலம் தாசில்தாராகவும், திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கிடங்கு மேலாளராக பணியாற்றி வந்த ஜானகி கூத்தாநல்லூர் தாசில்தாராகவும், திருத்துறைப்பூண்டி தனி தாசில்தார் ராஜாராமன் குடவாசல் தாசில்தாராகவும், மன்னார்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ராம் வலங்கைமான் தாசில்தாராகவும்,

கூத்தாநல்லூர் தாசில்தார் ஜெகதீசன் திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கும், நீடாமங்கலம் தாசில்தார் தேவேந்திரன் நன்னிலம் தனிதாசில்தாராகவும், சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மன்னார்குடி அலகு நிலம் எடுப்பு தனிதாசில்தார் மலைமகள் மன்னார்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் கவிதா திருவாரூர் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும், டாஸ்மாக் உதவி மேலாளராக பணியாற்றி வந்த சந்தானகோபாலகிருஷ்ணன் சென்னை & கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மன்னார்குடி அலகு தனி தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை எண் 67 திருவாரூர் அலகு தனி தாசில்தார் ராஜராஜேந்திரன் கடற்கரையோர சாலை மேம்பாட்டு திட்டத்தின் திருத்துறைப்பூண்டி அலகு தனி தாசில்தாராகவும்,

அங்கு பணியாற்றிட வந்த தனி தாசில்தார் மதியழகன் திருத்துறைப்பூண்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரகவும், திருவாரூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் பத்மா கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றவியல் அலுவலக மேலாளராகவும், அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் குருநாதன் திருவாரூர் பேரிடர் தாசில்தாராகவும், நன்னிலம் தனி தாசில்தார் உஷாராணி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், திருவாரூர் பேரிடர் தாசில்தாராக பணியாற்றி வந்த பரஞ்ஜோதி அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்து கலெக்டர் சாரு உத்தரவிட்டுள்ள நிலையில் திருவாரூர் தாசில்தார் செந்தில்குமார் திருவாரூரிலேயே பணியாற்றுவார் என்றும், அவருக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட தாசில்தார் குருமூர்த்தி திருத்துறைப்பூண்டியில் தாசில்தாராக பணியாற்றுவார் என்றும் கலெக்டர் சாரு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

The post திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Saru ,Saru ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர்...