×

தண்டோரா மூலம் டெங்கு விழிப்புணர்வு

திருச்செங்கோடு, அக்.5: திருச்செங்கோடு நகராட்சி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், பட்டறை மேடு பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தண்டோரா அறிவிப்பு செய்யப்பட்டது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பட்டறைமேடு பகுதி மக்களிடம் வாகன டயர்களில் மழைநீர் புகுந்து டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் பாதுகாக்க வேண்டும். தினசரி உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தேவையற்ற பொருட்களை அகற்றி, டெங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தண்டோரா அறிவிப்பு எச்சரிக்கை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், மாதேஸ்வரன், தினேஷ்குமார், செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேஸ்வரன், மற்றும் நகராட்சி அலுவலர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தண்டோரா மூலம் டெங்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Dengue ,Tiruchengode ,Tiruchengode Municipality Public Health and Disease Prevention Department ,Tandora ,Pattara Medu ,president ,Nalini Sureshbabu ,Natesan ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது