×

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, அக்.5: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி வாழ்த்துரை வழங்கினர். கடந்த 2018ல் பணியில் சேர்ந்த மினி மைய ஊழியருக்கும், 2011ல் பணியில் சேர்ந்த மினி மைய ஊழியர்கள் 8 பேருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். மினி மையத்தில் பணியாற்றும் 371 ஊழியர்களில், 156 பேர் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் பணி மாறுதல் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Krishnagiri ,State ,Vice President ,Govindhammal ,District Secretary ,Devi ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடியில் புகுந்த நாகப்பாம்பு