திருவள்ளூர் நகரமன்ற கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் மன்ற கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் வே.வசந்தி வேலாயுதம், வெ.சுமித்ரா வெங்கடேசன், ப.நீலாவதி பன்னீர்செல்வம், ரா.அம்பிகா ராஜசேகர், கு.பிரபாகரன், ஆர்.பிரபு, கோ.சாந்தி கோபி, த.அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார், எஸ்.பத்மாவதி ஸ்ரீதர், ஜெ.அருணா ஜெய்கிருஷ்ணன், டி.செல்வகுமார், ப.இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், ந.ஹேமலதா நரேஷ், கோ.கந்தசாமி, ஆர்.விஜயகுமார், ம.கமலி மணிகண்டன், வி.சித்ரா விஸ்வநாதன், ச.ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி கண்ணன், சீ.தனலட்சுமி சீனிவாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் நகர் மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத்தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகர மன்ற உறுப்பினர்களுக்கு ₹ 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வடக்கு ராஜ வீதியில் செயல்பட்டு வந்த நகராட்சி தொடக்கப்பள்ளி தவிர்க்க முடியாத காரணத்தால் தனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருவதால் உடனடியாக புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் கவுன்சிலர் வி.இ.ஜான் பேசும்போது, பூண்டி காப்புக் காட்டுக்குள் இருக்கும் குரங்குகள் தற்போது நகருக்குள் புகுந்து, வீடுகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் உறுதியளித்தார்.

The post திருவள்ளூர் நகரமன்ற கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: