திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி வீதி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி மனம் உருக ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தில் நேற்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா என பக்தி முழக்கத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் 2வது நாள் பிரமோற்சவம் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி appeared first on Dinakaran.