உதங்க மகரிஷிக்கு ஐவண்ணநாதர் ஆடிமாதம் ஐந்து வண்ணங்களில் காட்சி கொடுத்து அருளினார், இதனால் ஆண்டுதோறும் உறையூர் காந்திமதிஅம்மை உடனுறை பஞ்சவர்ண சுவாமி திருக்கோவிலில் பஞ்சப்பிரகாரவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் இங்குள்ள சிவனை வணங்குபவர்களுக்கு பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி பஞ்சப்பிரகார விழா வாகன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சவர்ணேஸ்வரர் உடனுறை காந்திமதி சமேதர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றபின்னர், வாகனமண்டபத்திலிருந்து புறப்பாடாகி உதங்க மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உதங்க முனிவர் மற்றும் சுவாமி, அம்பாளுக்கு ஒருசேர மகா தீபாராதனை நடைபெற்றதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர். திருமுறை பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க பிரகாரத்தில் வலம்வந்து பின்னர் மீண்டும் வாகனம் மண்டபத்தை சென்றடைந்தனர். விழா ஏற்பாடுகளை உதங்க மகரிஷி பவுர்ணமி வழிபாட்டு அன்பர்கள், கோவில் பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்
The post திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் வாகன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சவர்ணேஸ்வரர்: திரளான பக்த்தர்கள் பங்கேற்ப்பு appeared first on Dinakaran.