திருநள்ளாறு கோயிலில் 20ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனி பகவான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். சனி பெயர்ச்சியன்று கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும். சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் அளித்த பேட்டி: பக்தர்களின் பாதுகாப்புக்காக காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்த 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

திருநள்ளாறு பகுதியை சுற்றி 13 இடங்களில் வாகன நிறுத்துமிடம், 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகிறது. 120 தற்காலிக கழிப்பறைகள், கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 162 சிசிடிவி ேகமராக்கள் அமைக்கப்படுகிறது. ஆன்லைன், ஆப்லைனில் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை 15, 16ம் தேதிகளில் துவங்கப்படும். ஆன்லைன் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கோயில் வளாகத்தில் 15 இடங்களில் டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. சனி பெயர்ச்சி விழாவுக்காக ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் இருந்து 1,000 சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது என்றார்.

The post திருநள்ளாறு கோயிலில் 20ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: