பெங்களூரு: கர்நாடகா-தமிழ்நாடு இடையிலான காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மாநில துணைமுதல்வரும் நீர்பாசனதுறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன காரணத்தினால் தமிழ்நாடு கேட்கும் அளவு நீரை தங்களால் வழங்க முடியவில்லை. கர்நாடக மாநிலத்தின் நீர் ஆதாரத்தை காப்பாற்ற சட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் அனைத்து கட்சி குழு பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிய உடன் நாங்கள் அனைவரும் டெல்லி சென்று அவரை நேரில் சந்தித்து மனு அளிப்போம். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் சட்ட வல்லுனர்களுடன் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்து முழுவதுமாக ஆலோசிக்கப்பட்டது. கர்நாடக அரசின் நிலைப்பாட்டை புதிய மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். வழக்கு விசாரணை இன்று வருகிறது. மாநில அரசின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் நமது மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை வாதத்தின் மூலம் தெரிவிப்பார்கள் என்றார்.
The post காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்: டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.